/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொருட்களை எப்படி பார்த்து வாங்கணும்; கலெக்டர் பேச்சு
/
பொருட்களை எப்படி பார்த்து வாங்கணும்; கலெக்டர் பேச்சு
பொருட்களை எப்படி பார்த்து வாங்கணும்; கலெக்டர் பேச்சு
பொருட்களை எப்படி பார்த்து வாங்கணும்; கலெக்டர் பேச்சு
ADDED : நவ 22, 2025 07:11 AM
கோவை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 தொடர்பாக, இளம் நுகர்வோருக்கான புத்தாக்கப் பயிற்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்து பேசியதாவது:
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 பிரிவு 2(7)படி, நுகர்வோர் என்பவர், எந்தவொரு பொருட்களையும் வாங்கும் அல்லது எந்தவொரு சேவைகளையும் பெறுபவர்.
பொருட்கள் வாங்கும் போது அதில் உள்ள அளவு, தயாரிக்கப்பட்ட நாள், காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை தெளிவாக பார்த்து வாங்க வேண்டும்.
தேதி காலாவதியாகியிருந்தால், விற்பனையாளர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் அல்லது இது தொடர்பான புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்தெரிவிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் பவன்குமார் பேசினார்.
இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பழனிக்குமார், கூட்டுறவுத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் சிவகுமார்,மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் விஸ்வநாதன்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்கள் மற்றும் பரிசு பொருட்களை, கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

