/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி!
/
காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி!
ADDED : ஏப் 02, 2025 06:56 AM

அன்னுார்; பொங்கலூரில், காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை மாணவியர், பொங்கலூரில் இயற்கை விவசாயி கோபால், கோமதி ஆகியோர் தோட்டத்தில், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்புக்கண் வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
'தென்னை மரங்களில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன் வண்டை கட்டுப்படுத்த, இனக் கவர்ச்சி பொறி பயன்படுத்த வேண்டும். தென்னை மரத்தின் மகசூலை பாதிக்கும் இவ்வண்டுகளை ரசாயன பூச்சிக்கொல்லி இன்றி, இயற்கை முறையில் கட்டுப்படுத்த இது சிறந்த வழி' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.
இன கவர்ச்சி பொறியை பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.