/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரவுண்டானாவில் வாகனத்தை எப்படி இயக்கணும்! ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு தேவை
/
ரவுண்டானாவில் வாகனத்தை எப்படி இயக்கணும்! ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு தேவை
ரவுண்டானாவில் வாகனத்தை எப்படி இயக்கணும்! ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு தேவை
ரவுண்டானாவில் வாகனத்தை எப்படி இயக்கணும்! ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு தேவை
ADDED : பிப் 07, 2025 08:32 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், ரவுண்டானா பகுதிகளில், விபத்தின்றி வாகனங்களை இயக்க, ஓட்டுநர்கள் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. மழைநீர் வடிகால் கட்டும் பணி மற்றும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
மரப்பேட்டை பாலம், தேர்நிலையம், கடைவீதி சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, திருவள்ளுவர் திடல் ஆகிய பகுதிகளில், ரவுண்டானா அமைக்கப்பட்டது. இருப்பினும், ரவுண்டானாவில், முறையாக வாகனங்களை இயக்கத் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.
அவ்வபோது, அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களால், விபத்தும் ஏற்படுகிறது. எனவே, ரவுண்டானாவில் விபத்தின்றி வாகனங்களை இயக்க, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், படத்துடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், ரவுண்டானா பகுதியை சுற்றிலும், வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது. இதனால், போக்குவரத்து பாதிக்கும் என்பதால், பார்க்கிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டுநர்கள் அத்துமீறி வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
நெருக்கடியான சந்திப்புகளை எளிதாக கடந்து செல்வதற்காக, கடிகார சுழற்சியைப் பின்பற்றியே ரவுண்டான அமைக்கப்பட்டுள்ளது. ரவுண்டானாக்களில் 'ஸ்டாப் லைட்டு' இல்லாததால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுகின்றன.
ஆனால், ஓட்டுநர்களிடையே நிலவும் அவசர மனநிலை, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து வாகனங்கள் செல்லும் போதும், வாகனங்கள் ரவுண்டானாவை கடக்கும் போதும், நின்று, கவனித்து, செல்ல வேண்டும். இதை பின்பற்றாமல், போட்டி போட்டுக்கொண்டு வாகனங்களை நகர்த்துவதால், நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது, போலீசார் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது.
ஓட்டுநர்கள் வழித்தடத்தில் நுழையும்போது, வட்ட வடிவமைப்பு, எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடிகிறது. இருப்பினும், ரவுண்டானாவில் இணைவதற்கு முன், பாதசாரிகள் நடந்து செல்வதை ஓட்டுநர்கள், உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வட்டத்தில் ஏற்கனவே உள்ள வாகனங்களைக் கண்டறிவதுடன், வலப்புறம் வரும் வாகனங்களையும் பார்க்க வேண்டும். ரவுண்டானாவுக்குள் நுழைவதற்கு முன், வெளியேற சரியான பாதை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இடதுபுறம் வெளியேற அல்லது நேராகத் தொடர இடது பாதையில் செல்ல வேண்டும். வலதுபுறம் அல்லது 'யு டேர்ன்' செய்வதற்கு வலது அல்லது உள்பாதையைப் பயன்படுத்த வேண்டும். ரவுண்டானாவில் வாகனத்தை நிறுத்தக் கூடாது.
ரவுண்டானாவின் முதன்மை நோக்கம் போக்குவரத்தை தொடர்ந்து இயக்குவதாகும். இது குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்க, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகத்திடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.