தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடுக்குமாடிகளில் தீயணைப்பது எப்படி? போலீசுக்கு அடிப்படை பயிற்சி

அடுக்குமாடிகளில் தீயணைப்பது எப்படி? போலீசுக்கு அடிப்படை பயிற்சி

அடுக்குமாடிகளில் தீயணைப்பது எப்படி? போலீசுக்கு அடிப்படை பயிற்சி


UPDATED : ஆக 30, 2026 06:23 PM

ADDED : ஆக 30, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 06:23 PM ADDED : ஆக 30, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரிகள், வணிக வளாகங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் அடிப்படை தீத்தடுப்பு, பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி தலைமையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இன்றும் பயிற்சி நடக்கிறது.

தீத்தடுப்பு உபகரணங்களை சரியாக கையாள்வது, தீ விபத்து ஏற்பட்டவுடன் எடுக்க வேண்டிய முதல் கட்ட நடவடிக்கைகள், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது, தீயணைப்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவிப்பது குறித்து, செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

தீ விபத்து நேரங்களில் பதற்றமின்றி செயல்பட்டு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us