தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாந்தோப்பில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்கும் வழி

 மாந்தோப்பில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்கும் வழி

 மாந்தோப்பில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்கும் வழி


ADDED : பிப் 27, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்டத்தில், மா தோட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதல் இருப்பதையடுத்து, கட்டுப்படுத்த வேளாண் பல்கலைஆலோசனை வழங்கியுள்ளது.

மா மரங்கள், காய்களைத் தாக்கும் மாவுப்பூச்சி சாறு உறிஞ்சும் வகையைச் சேர்ந்தது. இலை, பூத்தண்டு, காய்களில் இருந்து சாறை உறிஞ்சுவதால், பயிர் வளர்ச்சி, மகசூல் பாதிக்கும். இப்பூச்சியின் திரவத்தால், கருப்பு பூஞ்சை வளர்ந்து, இலைகளின் ஒளிச்சேர்க்கை செயல்பாடு குறையும்.

தமிழகத்தில் ஜன., தொடக்கத்தில், மாவுப்பூச்சி முட்டையிடல், இளம்பூச்சி வெளிவருவது அதிகரிக்கும். குளிர்காலத்தில் மண்ணில் முட்டையிடுகின்றன. பிப்., மார்ச் மாதங்களில், மரத்தில் ஏறி பரவுகின்றன. மே வரை குறிப்பாக பூக்கும் காலத்தில் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

எனவே, மா பூக்கும் காலத்தில், மரத்தின் அடிப்பகுதியில், 4.5 அடி உயரத்துக்கு, பாலித்தீன் தாளை இடைவெளி இன்றி கட்ட வேண்டும். கீழ் விளிம்பில் பழ மர கிரீஸை தடவ வேண்டும். இதனால், பூச்சிகள் மரத்தின் மீது ஏறுவது தடுக்கப்படும்.

15 நாள் இடைவெளியில் பசையை மீண்டும் தடவவும். மே, ஜூன் மாதங்களில் மரத்தைச் சுற்றி ஆழமாக உழ வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் களைகள், புற்களை அகற்றவும். கிரிப்டோலோமஸ் மான்ட்ரோசிரி எனப்படும் வண்டுகளை மரத்துக்கு 10 வீதம் விடுவிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை ஒட்டு திரவம் சேர்த்து தெளிக்க வேண்டும் என, வேளாண் பல்கலை பூச்சியியல் துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us