/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பக்கவாதத்தில் இருந்து எப்படி தப்பிக்க லாம்! நரம்பியல் டாக்டர் ஆலோசனை
/
பக்கவாதத்தில் இருந்து எப்படி தப்பிக்க லாம்! நரம்பியல் டாக்டர் ஆலோசனை
பக்கவாதத்தில் இருந்து எப்படி தப்பிக்க லாம்! நரம்பியல் டாக்டர் ஆலோசனை
பக்கவாதத்தில் இருந்து எப்படி தப்பிக்க லாம்! நரம்பியல் டாக்டர் ஆலோசனை
ADDED : நவ 09, 2024 11:40 PM

முதுமை காலத்தில் பக்கவாத நோயால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என, டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முதுமை காலத்தில் ஏற்படும் பக்கவாதம் மற்றும் அதில் இருந்து தப்பிக்கவும், முன்னெச்சரிக்கையாக இருக்கவும் ஆலோசனைகளை வழங்குகிறார், மூளை மற்றும் நரம்பியல் துறை மூத்த நிபுணர் டாக்டர் அருள் செல்வன்.
''பக்கவாதம் நோய் பொதுவாக, 60 வயதை நெருங்கும்போது ஏற்படுகிறது. மூளையில் உள்ள ரத்த குழாயில் அடைப்பு அல்லது ரத்தக்கசிவு காரணமாக மூளையின் ஒரு பகுதி செயல் இழந்துவிடும். இதனால் முகம், கை, கால் வலிமை இழந்து விடும்.
முதுமை அடையும்போதும், அதிக ரத்த சர்க்கரை அளவு, அதிக ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால். புகை பழக்கம், மது பழக்கம் போன்றவற்றால், பக்கவாதம் ஏற்படுகிறது.
அதேபோல உடற்பயிற்சி குறைவு, சாப்பிட்டு விட்டு ஒரே இடத்தில் அதிகம் நேரம் இருப்பது போன்ற காரணத்தாலும் பக்கவாதம் வருகிறது. தற்போது முதுமையில் மட்டும் இல்லாமல், இளமையிலும் பக்கவாத நோய் வருகிறது. அவர்களின் துரித உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், அதற்கு காரணிகளாக உள்ளன. முதுமை காலத்தில் பக்கவாதம் ஏற்படும்போது இருதய பிரச்னை வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
அறிகுறி
பக்கவாதம் ஏற்பட்ட நான்கரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். வாயு, வேலை செய்த சலிப்பு என கால தாமதம் செய்யக்கூடாது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டால், மூளையில் ஏற்பட்ட அடைப்பை ஊசிமருந்து செலுத்தி கரைத்து விடலாம்.
அதிலும் சரியாகவில்லை என்றால், 24 மணி நேரத்தில் ஆஞ்சியோ சிகிச்சையில் மூளையில் உள்ள அடைப்பை நீக்கி விடலாம். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அதிகமானோர் இந்நோயால் பாதித்து வருகின்றனர். ஒருவருக்கு திடீரென பேசுவதில் சிரமம், சமநிலையிழப்பு, முகத்தில் மாற்றம், கை, கால் வலுவிழப்பு ஏற்பட்டால், அது பக்கவாதத்திற்கான அறிகுறி.
உணவு
பக்கவாதத்தில் இருந்து தப்பிக்க ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். துரித உணவு, எண்ணெய் பலகாரங்கள், வறுத்த உணவுகள், ரெட் மீட் (ஆடு, மாடு, பன்றி கறி) உணவுகளை தவிர்க்க வேண்டும். குட்கா, புகை பழக்கம், கூடவே கூடாது.
பக்கவாதத்தில் இருந்து தப்பிக்க வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள், 30 முதல் 45 நிமிடம் உடற்பயிற்சி, யோகா, தியானம், சீரான மனநிலையை கடைபிடிக்க வேண்டும். உணவு முறைகளில் கோழி இறைச்சி, மீன் வகைகள், பழ வகைகள், காய்கறிகள், சிறுதானிய வகைகளை சாப்பிடலாம். அவற்றை கடை பிடித்தால் பக்கவாத நோயில் இருந்து தப்பிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.