/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி உண்ணாவிரதம்
/
கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி உண்ணாவிரதம்
கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி உண்ணாவிரதம்
கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி உண்ணாவிரதம்
ADDED : செப் 21, 2025 11:11 PM

அன்னுார்; கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழக அரசு சார்பில் கிழக்கு புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மி பாளையத்தில் துவங்கி, சென்னி ஆண்டவர் கோவில், கிட்டாம் பாளையம், கணேசபுரம் வழியாக மத்தம்பாளையம் பிரிவில் இணையும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் குன்னத்தூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த தலைவர் ஈசன் முருகன் சாமி பேசுகையில், 'இந்த புதிய புறவழிச்சாலை தேவையற்றது.
இந்த சாலை குறித்த விரிவான திட்ட அறிக்கை எந்த அலுவலகத்தில் கேட்டாலும் வழங்கப்படுவதில்லை. பாதிக்கப்படும் பொது மக்களுக்கு கூட திட்டத்தின் முழு விவரத்தை தெரிவிக்க மறுக்கின்றனர். தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் தருவதில்லை. எனவே அரசு கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறத்தி உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும்' என்றார்.
கூட்டத்தில் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் முத்து விசுவநாதன், வக்கீல் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிழக்கு புறவழிச் சாலையை கைவிட வலியுறுத்தி பெரிய அளவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், அதற்கான தேதி மற்றும் இடத்தை விரைவில் அறிவிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இப்போராட்டத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், போராட்டக் குழுக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளை நேரில் சந்தித்து ஆதரவு கோர முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எஸ்.எஸ்.குளம் முன்னாள் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணசாமி, தன்னார்வலர்கள் கருணாமூர்த்தி, சண்முகசுந்தரம், சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.