/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவைத்துக்கு சென்ற கணவர் மாயம்; கலெக்டரிடம் மனைவி முறையீடு
/
குவைத்துக்கு சென்ற கணவர் மாயம்; கலெக்டரிடம் மனைவி முறையீடு
குவைத்துக்கு சென்ற கணவர் மாயம்; கலெக்டரிடம் மனைவி முறையீடு
குவைத்துக்கு சென்ற கணவர் மாயம்; கலெக்டரிடம் மனைவி முறையீடு
ADDED : மே 19, 2025 11:54 PM

கோவை; குவைத்தில், 10 ஆண்டுகளாக எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்த கணவரை காணவில்லை என, அவரது மனைவியும், குழந்தைகளும் கோவை கலெக்டரிடம் நேற்று, கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர்.
கோவை, சிங்காநல்லுார், அஸ்தாந்திர நாயக்கர் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன், 48; பத்து ஆண்டுகளாக குவைத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். சமீபத்தில், புதிதாக வேறொரு எண்ணெய் நிறுவனத்தில் சேர்ந்து, எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார். 10 நாட்களுக்கு முன், குடும்பத்தாருடன் மொபைல் போனில் பேசியிருக்கிறார்.
அன்றைய தினம் விடுமுறையாக இருந்ததால், அருகே உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்று வருவதாக கூறியிருக்கிறார். ஒரு மணி நேரத்துக்கு பின், குடும்பத்தார் தொடர்பு கொண்டபோது, மொபைல் போன் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்திருக்கிறது.
10 நாட்களாக சீனிவாசனிடம் பேச போராடியுள்ளனர். குவைத் நிறுவன மேலாளரிடம் பேசியிருக்கின்றனர். அந்நிறுவனம் சார்பில், குவைத் போலீசில் புகார் செய்திருக்கின்றனர்.
கவலையடைந்த மனைவி உஷாகுமாரி, மகன், மகள் மற்றும் உறவினர்கள், கோவை கலெக்டரை நேற்று சந்தித்து, கண்ணீர் மல்க முறையிட்டனர். இந்திய வெளியுறவுத்துறையில் பேசி, சீனிவாசனை மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதியளித்தார்.