தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஹைதராபாத் சிக்கன் குருமா

 ஹைதராபாத் சிக்கன் குருமா

 ஹைதராபாத் சிக்கன் குருமா


ADDED : ஜூலை 04, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 08:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்முறை: ஒரு வட சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நீளமாக நறுக்கி கண்ணாடி பதத்திற்கு வதக்கி பின் சிறியதாக நறுக்கிய கொப்பரை தேங்காயை சேர்த்து பொன் நிறத்தில் வதக்கவும். இதோடு கசகசா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து கூடவே நிலக்கடலை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கு ருமா செய்வதற்கு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்கவும். குழம்பு செய்வதற்கு வெங்காயத்தை நீளமாக நறுக்கி சேர்த்து வதக்கவும். சிறு தீயில் பொன்னிறமாக வெங்காயத்தை வறுக்க வேண்டும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ளவும். வதக்கியதும் அரைத்து விழுதை சேர்த்து நன்றாக எண்ணெயில் இந்த மசாலாவோடு வதக்க வேண்டும்.

தேங்காய் சேர்த்து இருப்பதனால் அடிப்பிடிக்க கூடும். அதனால் அரை கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து சிறு தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். மூடி போட்டு வதக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து தீயை குறைத்து தயிரை சேர்த்து கொள்ளவும். கூடவே மல்லி புதினா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். பிறகு கரம் மசாலா தூள், நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் சிக்கன் சேர்த்து கலந்து விடவும்.

சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும். 15 நிமிடங்களில் கோழிக்கறி நன்றாக வெந்துவிடும். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரும் அதில் இருக்கும். தேவைப்பட்டால் சரி பார்த்துக் கொள்ளவும். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான சிக்கன் குருமா தக்காளி சேர்க்காமல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us