/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் மாணவர்கள் துாய்மை பணி
/
அரசு பள்ளியில் மாணவர்கள் துாய்மை பணி
ADDED : செப் 28, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளி மாணவ மாணவிகள் நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமை, பள்ளி தலைமையாசிரியர் கணேஸ்வரி துவக்கி வைத்தார். முதல் நாளான நேற்று, மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர். முகாம் துவக்க விழாவில், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.