/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான் முதல்வன் திட்டம் கல்லுாரி கனவு நிகழ்ச்சி
/
நான் முதல்வன் திட்டம் கல்லுாரி கனவு நிகழ்ச்சி
ADDED : மே 19, 2025 11:20 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லூரியில், 'நான் முதல்வன் திட்டம் - கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் கணேசன், உயர்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன், உயர்கல்வியில் உள்ள பல்வேறு துறையின் வேலைவாய்ப்புகள் பற்றி கூறினார்.
நான் முதல்வன் திட்டம் பற்றியும், பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., போன்ற கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது, அதில் உள்ள பாடங்கள் பற்றிய விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயின்றுணர்கள், தலைமை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.