/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீமோ சிகிச்சையில் உடைந்து அழுதேன்... இன்று மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறேன்! கேன்சரில் இருந்து மீண்டு வந்த ஆசிரியை பேட்டி
/
கீமோ சிகிச்சையில் உடைந்து அழுதேன்... இன்று மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறேன்! கேன்சரில் இருந்து மீண்டு வந்த ஆசிரியை பேட்டி
கீமோ சிகிச்சையில் உடைந்து அழுதேன்... இன்று மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறேன்! கேன்சரில் இருந்து மீண்டு வந்த ஆசிரியை பேட்டி
கீமோ சிகிச்சையில் உடைந்து அழுதேன்... இன்று மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறேன்! கேன்சரில் இருந்து மீண்டு வந்த ஆசிரியை பேட்டி
ADDED : அக் 12, 2024 11:23 PM
புற்றுநோயிலிருந்து மீள, மனதளவிலான நம்பிக்கை எந்தளவு முக்கியமானது என்பதை விளக்குகிறார், மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட, கோவை தனியார் பள்ளிஆசிரியை.
ஆரோக்கியத்தில் அக்கறை
எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவள். ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்ட எனக்கு சளி, காய்ச்சல் கூட அவ்வளவு சீக்கிரம் வராது. நான் வலிமையானவள் என்ற கர்வம், எப்போதும் எனக்குள் இருக்கும்.
இந்த நிலையில்தான், 2021ல் திடீர் சோர்வு, உடல் வலிக்காக ஜி.கே.என்.எம்., மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றேன். பரிசோதனையில், மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனக்கு புற்றுநோய் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் தன்னம்பிக்கை எல்லாம், சுக்குநுாறாக உடைந்து விட்டது. அனைத்தையும்இழந்து விட்டதாக உணர்ந்தேன்.
பார்த்துக்கலாம்...விடு!
இந்த தருணத்தில் என் கணவர் எனக்கு சொன்ன ஒரு வார்த்தை, 'எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்'. சேர்ந்து இதிலிருந்து மீள்வோம் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த வார்த்தைகள் என்னுள் மீண்டும் நம்பிக்கையை விதைத்தது. கணவர், குழந்தைகள், அம்மா, அப்பா, மாமியார் என மொத்த குடும்பத்தினரும், பெரும் ஆதரவாக இருந்தனர். மருத்துவர்கள், கேன்சர் சர்வைவர்ஸ், நண்பர்கள், ஒவ்வொருவரும் எனக்கு தொடர்ந்து நம்பிக்கை கொடுத்தனர். பொதுத்தேர்வு நேரம் என்பதால், கீமோ சிகிச்சை எடுத்த மறுநாளே மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தேன். வகுப்பறையில் நின்று கற்பிப்பது, என்னை மீண்டும் வலிமையாக உணர வைத்தது.
உதவியது யோகா!
உடற்பயிற்சி,யோகா, தியான பயிற்சிகள் மூலம் உடல், மனதை வலிமைப்படுத்தினேன். புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு, இப்போது மூன்று வருடங்களாகி விட்டது. புற்றுநோய்க்கு எதிரான போராட்டம், என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியவளாக உணர்கிறேன். முன்பை விட, உடல் வலிமையும், மன நம்பிக்கையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது போல உணர்கிறேன். நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்வாக இருக்கிறேன்.
புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உடல் ரீதியானது மட்டுமில்லை, உளவில்ரீதியானதும் கூட. மருத்துவத்துடன், குடும்பத்தினர் உள்பட சக மனிதர்களின் ஆதரவும் நுாறு சதவீதம் தேவை.
கீமோ சிகிச்சையின் போது ஒருநாள், 'என்னால் முடியாது, குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறி உடைந்து அழுதேன். அப்போது, 'நீ நல்லபடியாய் மீண்டு வந்து உன் குழந்தைகளை பார்க்கபோகிறாய்' என, நர்ஸ் ஒருவர் கூறினார்.
இப்படி சக மனிதர்கள் தரும் நம்பிக்கை, தைரியம் நம்மை தொடர்ந்து போராட வைக்கும். நம்பிக்கையால் மீண்ட நான் தற்போது, மற்ற கேன்சர் நோயாளிகளுக்கும் தன்னம்பிக்கை அளித்து வருகிறேன்.