/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சான்றிதழ்களுக்கு ஜெராக்ஸ் எடுக்கணும்'
/
'சான்றிதழ்களுக்கு ஜெராக்ஸ் எடுக்கணும்'
ADDED : ஜூன் 01, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாளை (2ம் தேதி) முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
9 இளநிலை பட்டப்படிப்பு வகுப்புகளில், 480 இடங்கள் உள்ளன. 14,673 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்குக்கு வரும் முன், ஒவ்வொரு சான்றிதழ்களிலும் தேவையான அளவு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஜூன் 30ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 16ம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளதாக, கல்லூரி கூடுதல் பொறுப்பு முதல்வர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.