/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி மது குடிக்கவே மாட்டேன்; வாக்குறுதி மீறியவர் தற்கொலை
/
இனி மது குடிக்கவே மாட்டேன்; வாக்குறுதி மீறியவர் தற்கொலை
இனி மது குடிக்கவே மாட்டேன்; வாக்குறுதி மீறியவர் தற்கொலை
இனி மது குடிக்கவே மாட்டேன்; வாக்குறுதி மீறியவர் தற்கொலை
ADDED : ஏப் 17, 2025 07:14 AM
தொண்டாமுத்தூர்; பச்சாபாளையம், கோவை கார்டனை சேர்ந்தவர் மோகன்ராஜ்,26; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவருக்கு, திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மோகன்ராஜ், மதுபழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால், கணவன் -- மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், மனைவி ரித்திகா சண்டையிட்டு விட்டு, குழந்தைகளுடன் தனது அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். மோகன்ராஜ் நேரில் சென்று, மனைவியிடம் இனி மது அருந்த மாட்டேன் என, வாக்குறுதி கொடுத்து, வீட்டிற்கு வர கூறியுள்ளார்.
ரித்திகாவும், மாலை வருவதாக கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் மாலை, ரித்திகா வீட்டிற்கு சென்றபோது, அப்போது மோகன்ராஜ், தனது நண்பர்களுடன் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். இதனைக்கண்ட ரித்திகா, கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். தகராறு செய்து விட்டு, மீண்டும் அம்மாவின் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது மோகன்ராஜ், வீட்டிற்குள் சென்று, கதவை தாழிட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பேரூர் போலீசார், உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.