/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல விளையாட்டு மூன்றாம் முறையாக ஐ.ஐ.எச்.ஆர்., 'சபாஷ்'
/
ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல விளையாட்டு மூன்றாம் முறையாக ஐ.ஐ.எச்.ஆர்., 'சபாஷ்'
ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல விளையாட்டு மூன்றாம் முறையாக ஐ.ஐ.எச்.ஆர்., 'சபாஷ்'
ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல விளையாட்டு மூன்றாம் முறையாக ஐ.ஐ.எச்.ஆர்., 'சபாஷ்'
ADDED : ஏப் 21, 2025 06:12 AM

கோவை : தென் மண்டல விளையாட்டு போட்டியில், ஐ.ஐ.எச்.ஆர்., அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றுள்ளது.
கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக (ஐ.சி.ஏ.ஆர்.,) தென் மண்டல விளையாட்டு போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்தில் நான்கு நாட்கள் நடந்தது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளம், டில்லி, மஹாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த, 1,000 பணியாளர்கள் பங்கேற்றனர்.
தடகள போட்டி நிறைவில், கர்நாடகா டி.சி.ஆர்., நிறுவனத்தை சேர்ந்த பிரின்ஸ்குமார், பெண்கள் பிரிவில் பெங்களூரு 'நிவேதி' நிறுவனத்தை சேர்ந்த ஆச்சல் பலேவன் ஆகியோர் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, பெங்களூரு ஐ.ஐ.எச்.ஆர்., அணியும், இரண்டாம் இடத்தை டில்லி ஐ.ஏ.ஆர்.ஐ., நிறுவனமும் பெற்றது. இதில், ஐ.ஐ.எச்.ஆர்., நிறுவன அணி மூன்றாவது முறையாக தென் மண்டல விளையாட்டு போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்று பெருமை சேர்த்துள்ளது.
கபடி போட்டியில், ஐ.ஐ. எச்.ஆர்., அணி, 32-19 என்ற புள்ளிகளில் டில்லி ஐ.ஏ.ஆர்.ஐ., அணியை வென்று முதல் பரிசை தட்டியது. கால்பந்து போட்டியில் கொச்சி சி.எம்.எப்.ஆர்.ஐ., அணி, 2-0 என்ற புள்ளிகளில் டெல்லி ஐ.ஏ. ஆர்.ஐ., அணியை வென்று முதல் பரிசு வென்றது.
செஸ் போட்டியில், ஐ.ஏ.ஆர்.ஐ., அணி வீரர் கமல்ஜித் முதல் பரிசையும், திருச்சியில் உள்ள இந்திய வாழை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த கிரிபாபு, இரண்டாம் இடத்தையும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, டில்லி ஐ.சி.ஏ.ஆர்., துணை இயக்குனர் யாதவா பரிசுகள் வழங்கினார்.