/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெங்காயம் விலை கேட்டாலே 'கண்ணீரு' ஊட்டி பூண்டு விலையும் உச்சம்
/
வெங்காயம் விலை கேட்டாலே 'கண்ணீரு' ஊட்டி பூண்டு விலையும் உச்சம்
வெங்காயம் விலை கேட்டாலே 'கண்ணீரு' ஊட்டி பூண்டு விலையும் உச்சம்
வெங்காயம் விலை கேட்டாலே 'கண்ணீரு' ஊட்டி பூண்டு விலையும் உச்சம்
ADDED : நவ 13, 2024 05:10 AM

கோவை : மழை காரணமாக விளைச்சல் குறைந்ததால், பூண்டு மற்றும் பெரிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.
கோவைக்கு ஒசூர், மங்களூர், ஊட்டி, உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால், பூண்டு விலைஅதிகரித்துள்ளது.
கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ, 300 ரூபாய்-க்கு விற்ற முதல் தர பூண்டு, தற்போது, 400 முதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சைனா பூண்டு, 350 முதல் 400 ரூபாய்க்கும், நாட்டுப்பூண்டு, 320 முதல் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்து வருவதால், பெரிய வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது. தரமான பெரிய வெங்காயம் சில்லரை விலையில் கிலோ, 90 ரூபாய்க்கும், அடுத்த ரகம், கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காந்திபுரம் காய்கறி மாக்கெட் வியாபாரி மைக்கேல்சாமி கூறுகையில், ''இப்போது விளைச்சல் இல்லை. 'ஸ்டாக்' வைக்கப்பட்ட வெங்காயம், பூண்டு மட்டும் தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஊட்டி பூண்டுதான் முதல் தரமானது; விலை அதிகம். சில மாதங்களாக ஊட்டியில் பூண்டு விளைச்சல் இல்லை. இந்த மாதம் இறுதிக்குள் புதிய விளைச்சல் வரத் துவங்கிவிடும். டிசம்பரில் பெரிய வெங்காயம், பூண்டு இரண்டும் விலை குறைய வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

