/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விளையாட்டில் சிறந்து விளங்கினால் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு'

ADDED : அக் 21, 2024 04:23 AM
மேட்டுப்பாளையம் : விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கினால், பாதுகாப்பு துறையில் வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என என்.சி.சி. கமண்டிங் அதிகாரி ஜெயந்தி மோகன் ஜோஷி தெரிவித்தார்.
காரமடையில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில், விளையாட்டு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி நிர்வாகி சேவியர் மனோஜ், முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கினர். விழாவில், என்.சி.சி. கமண்டிங் அதிகாரி ஜெயந்தி மோகன் ஜோஷி பேசுகையில், ''மாணவர்கள் விளையாட்டில் சிறந்த விளங்கினால், நல்லா ஆரோக்கியமுடன் இருக்கலாம். நம் நாட்டில் உள்ள பாதுகாப்பு துறையில் வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்,'' என்றார். மேலும், விமான படை, ராணுவத்தில் இருக்கும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு விளக்கினார்.
தடகளம், கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் தலைமை பயிற்சியாளர் பார்த்திபன், உடற்கல்வித்துறை இயக்குனர் தீபக், பேராசிரியர்கள் கார்த்திக், கிங்ஸ்லி ஜெபகுமார், சுஜிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.