sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால்...! கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து அறிவுரை

/

 நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால்...! கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து அறிவுரை

 நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால்...! கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து அறிவுரை

 நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால்...! கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து அறிவுரை


ADDED : மார் 22, 2026 05:47 PM

Google News

ADDED : மார் 22, 2026 05:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: ஐ.எஸ்.ஐ., முத்திரை உள்ள இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத மின்சார சாதனங்களை பயன்படுத்தும் முன், பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்காசிய பிராந்தியத்தில், மூன்று வாரங்களை கடந்து இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. முதல் வாரத்தில் இருந்தே எரிவாயு வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டது. வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களால், இன்டக்ஷன் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பு போன்ற மின்சார சமையல் சாதனங்களின் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சிலர் நீண்ட நாட்களாக இத்தகைய சாதனங்களை உபயோகப்படுத்தாமல், எந்த பராமரிப்பும் இன்றி தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மின்விநியோக அமைப்புகளில் கூடுதல் சுமை மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

மின்சார சாதனங்களை பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழக மின்வாரியத் தலைவரும், கூடுதல் அரசு தலைமை செயலாளருமான ராதாகிருஷ்ணன், நம்மிடம் கூறியதாவது:

மின்வாரியத்தில் உள்ள கள அலுவலர்கள், மக்களுக்கு பாதுகாப்பான, மின்சார பயன்பாட்டுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக நகர்ப்புற, வணிக மற்றும் அதிக மக்கள் அடர்த்தி உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்டக்ஷன் போன்ற அதிக மின்சார சுமை உடைய சாதனங்களுக்கு சரியான திறன் கொண்ட, தனித்தனி பிளக் மற்றும் சாக்கெட்டுகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். மின்சார சுற்றுகளை அதிக சுமையுடன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வீட்டு ஒயரிங் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை உள்ள தரமான இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத மின்சார சாதனங்களை பயன்படுத்தும் முன், பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும்.

கள ஆய்வு, நேரடி தொடர்பு, உள்ளூர் தகவல் பரிமாற்றம் வாயிலாக அதிக சுமை, ப்யூஸ் பழுதுகள் மற்றும் சாதனங்கள் தொடர்பான புகார்களை விரைவாக தீர்க்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மின் விநியோக பிரிவு, டிரான்ஸ்பார்மர்கள், பீடர்கள் மற்றும் இணைப்புகள் மீது ஏற்படும் கூடுதல் மின் சுமையை கண்காணித்து, தேவையான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மக்கள் பாதுகாப்பே முதன்மையானது; இதை உறுதி செய்ய அனைத்து நிலைகளிலும் முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.-----






      Dinamalar
      Follow us