/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகமா பைக் ஓட்டினா 'பைன்' போடுங்க! விபத்தை தவிர்க்க மன்றாடும் மக்கள்
/
வேகமா பைக் ஓட்டினா 'பைன்' போடுங்க! விபத்தை தவிர்க்க மன்றாடும் மக்கள்
வேகமா பைக் ஓட்டினா 'பைன்' போடுங்க! விபத்தை தவிர்க்க மன்றாடும் மக்கள்
வேகமா பைக் ஓட்டினா 'பைன்' போடுங்க! விபத்தை தவிர்க்க மன்றாடும் மக்கள்
ADDED : செப் 30, 2024 05:19 AM
வால்பாறை : வால்பாறை - சோலையாறுடேம் செல்லும் ரோட்டில், அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறைக்கு, இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா வருவோர், சோலையாறுடேம் வரை கட்டாயம் செல்கின்றனர். சோலையாறுடேம் செல்லும் ரோட்டில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
சில நாட்களுக்கு முன், கோவை தனியார் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டு, ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறையை சுற்றி பார்க்க விடுமுறை நாட்களில், அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். இளைஞர்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்கின்றனர். இதனால், எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பாதையில் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும் என, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இதை யாரும் கண்டு கொள்வதில்லை.
மேலும், பெரும்பாலான சுற்றுலா பயணியர் மது போதையில் வாகனங்களை ஓட்டுவதால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், விபத்து ஏற்படும் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், வேகத்தடையும் அமைக்க வேண்டும். அதிவேகமாக வரும் இருசக்கர வாகனங்களை போலீசார் கண்டறிந்து, உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.