/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொஞ்சம் தடுமாறினால் கால்வாயில் விழும் அபாயம்
/
கொஞ்சம் தடுமாறினால் கால்வாயில் விழும் அபாயம்
ADDED : செப் 27, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; டவுன்ஹாலில் இருந்து லங்கா கார்னர் செல்லும் ரோட்டில், மைக்கேல் பள்ளி அருகே சிக்னல் அமைந்துள்ளது.
சிக்னலில் இருந்து இடதுபுறமாக கூட்ஷெட் ரோடு திரும்பும் இடத்தில் சாக்கடை கால்வாய் மீது நடை பயன்பாட்டுக்காக இரும்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், இரு தகடுகள் இல்லாததால், கால்கள் சிக்கி, விபத்துக்குள்ளாகும் அபாயத்தை ஏற் படுத்தியுள்ளது.
அருகே, பள்ளி இருப்பதால் குழந்தைகள் ரோட்டை கடக்க இந்த நடைபாதையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதனால், விபத்து ஏற்படும் முன், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.