sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நவராத்திரி கொலு வைத்தால் நினைத்த காரியம் கைகூடும்; கொலு வைத்து வாசகியர் பரவசம்

/

நவராத்திரி கொலு வைத்தால் நினைத்த காரியம் கைகூடும்; கொலு வைத்து வாசகியர் பரவசம்

நவராத்திரி கொலு வைத்தால் நினைத்த காரியம் கைகூடும்; கொலு வைத்து வாசகியர் பரவசம்

நவராத்திரி கொலு வைத்தால் நினைத்த காரியம் கைகூடும்; கொலு வைத்து வாசகியர் பரவசம்


ADDED : செப் 29, 2025 12:40 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தினமலர் நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு விசிட் சாயிபாபா காலனி மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று நடந்தது.

நவராத்திரி கொலு வைத்துள்ள, வாசகர்களின் வீடுகளுக்கு, அவர்களின் அழைப்பின் பேரில், தினமலர் குழுவினர் விசிட் செய்தனர். கொலு வைத்துள்ள நம் வாசகியர், நவராத்திரி கொலுவின் சிறப்பு குறித்து விளக்கினர்.

லட்சுமி, ராமலிங்கம் காலனி சாயிபாபா காலனி

துர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும், முன்று நாட்கள் தனித்தனியாக பூஜை செய்து, இறுதிநாள் உறவினர்களை அழைத்து சிறப்பு பூஜை செய்வேன். நவராத்திரி பூஜையால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சுமதி, ரமணா லே அவுட், ராமலிங்கம் காலனி

வருடம் தவறாமல் கொலு வைத்து வருகிறோம். வீட்டில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு செய்தால், நினைத்த காரியம்

கைகூடிவரும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

ஜானகி, கே.கே.புதுார்

இந்த வருடம் திருவையாறில் அப்பருக்கு கைலாசத்தை காட்டும், காட்சியை தீம் ஆக வைத்து இருக்கிறோம். வீட்டில் உள்ள அட்டை பெட்டி மற்றும் பேப்பர் போன்ற பழைய பொருட்களை பயன்படுத்தி சிவன், பார்வதி உருவத்தை செய்து, தனியாக கொலுவாக வைத்து இருக்கிறோம்.

ஜெயலட்சுமி, கே.ஜி. லே -அவுட் கே.கே.புதுார்

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி உருவ பொம்மைகளை பெரியதாக வைத்து இருக்கிறோம். கல்யாண செட்டை தனியாக வைத்து இருக்கிறோம். அம்பாளிடம் வரம் வேண்டி கொலு வைத்தால் அது நடக்கும்.

ஜோதி, கே.கே.புதுார், சாயிபாபாகாலனி

நவராத்திரி கொலு வைத்தால் வீட்டில், லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். மனதில் கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். அதனால், 20 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபடுகிறேன்.

கருணாம்பிகை, சாயிபாபா காலனி

ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் பண்டிகையை தீம் ஆக வைத்து, கொலு வைத்து இருக்கிறோம். பெருமாளுக்கு மட்டும் தனியாக படிகள் வைத்து, அவரது பல அவதாரங்களை காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

விஜயலட்சுமி, எஸ்.கே.வி.நகர், சாயிபாபாகாலனி

நவராத்திரி கொலு வைப்பது நம் பாரம்பரியத்தை மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கிறது.

சாவித்திரி, கே.கே.புதுார்

இந்த ஆண்டு போதை ஒழிப்பு கருத்தை, மையமாக வைத்து தனியாக கொலு வைத்து இருக்கிறோம். அம்பாள் அருளால், சமூகத்தில் தீமைகள் மறைந்து நல்ல காரியங்கள் நடக்கும்.

சைலஜா, பட்டீஸ்வரர் பார்க் அபார்ட்மென்ட், ராமசாமி லேஅவுட் சாயிபாபாகாலனி

முருகனின் ஆறுபடை ஆலயங்களையும் தீம் ஆக வைத்து, அலங்கரித்து இருக்கிறோம்.இவை தவிர, இல்லாமல் பொதுவாக, கிருஷ்ணர், விநாயகர், அம்பாளும் கொலுவில் இடம் பெற்றுள்ளனர்.

சுதா ரவி, கிருஷ்ணா அபார்ட்மென்ட், என்.எஸ்.ஆர்.ரோடு

கிருஷ்ண பரமாத்மாவின் பல அவதாரங்களை காட்சிபடுத்தி இருக்கிறோம். நவராத்திரி கொலு வைத்தால், அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். அதனால் தொடர்ந்து கொலு வைத்து வருகிறோம்.

இந்த நவராத்திரி கொலு விழா கொண்டாட்டத்தை, தினமலர் நாளிதழுடன் மெடிமிக்ஸ், மேளம், ரெஜூ ஆயுர், லயா காபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. தினமலர் குழுவினர், இன்று சுந்தராபுரம் மற்றும் போத்தனுார் பகுதிக்கு கொலு விசிட் வருகின்றனர்.






      Dinamalar
      Follow us