ADDED : ஆக 20, 2026 05:43 PM
சிட்ரா: டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மேலாண்மையியல் துறை சார்பில் தொழில் முனைவோர் தின விழா நிகழ்ச்சி நடந்தது.
அனன்யா குரூப் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் உமாமகேஸ்வரி பேசுகையில், ‘‘முதியோர் இல்லங்களை நேரில் பார்வையிட்டபோது, அங்கு போதிய வசதிகள் இல்லை. அதனால், நவீன உள்கட்டமைப்பு, உடற்பயிற்சிக் கூடம், யோகா மண்டபம், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளுடன் நானா நானி திட்டம் உருவாக்கப்பட்டது. தொழிலில் ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பானது. விடாமுயற்சி, பொறுமை, கடின உழைப்பு மற்றும் நேர மேலாண்மை ஆகியவற்றுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்,’’ என்றார்.
கல்லூரி முதல்வர் சரவணன், கல்விக்குழுமங்களின் கல்விசார் இயக்குநர் முத்துசாமி, மாணவர் நல முதன்மையர் மோகன் உள்ளிட்ட பேராசிரியர்களும் மாணவர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
