/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ஐ.ஜி., ஆய்வு
/
கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ஐ.ஜி., ஆய்வு
ADDED : நவ 29, 2024 11:46 PM

கோவை: 2ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி துவங்க உள்ள நிலையில் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ஐ.ஜி., ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு காவல் துறையில், 2ம் நிலை காவலர்களாக பணிபுரிய தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 1890 ஆண்கள், 804 பெண்கள் என மொத்தம், 2694 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அடிப்படை போலீஸ் பயிற்சி, 8 நிரந்தர காவல் பயிற்சி பள்ளிகளில் வருகிற, 4ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது.
இதில் கோவையில், 200 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சியின் போது ஒழுக்கம், கவாத்துப் பயிற்சி, சட்ட வகுப்பு பயிற்சி, துப்பாக்கி சுடுதல், தற்காப்பு கலைகள், யோகா, ஓட்டுநர் பயிற்சி போன்ற பல விதமான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதையடுத்து போலீஸ் பயிற்சி பள்ளிகளில் ஐ.ஜி., (பயிற்சி) ஜெயகவுரி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வந்த அவர் தங்குமிடம், உணவு விடுதி, கவாத்து மைதானம், வகுப்பறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து போலீஸ் பயிற்சி பள்ளியின் முதல்வர் சிட்ரிக்மேனுவேல் மற்றும் துணை முதல்வர் பழனிகுமார் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.