UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
ஆனைமலை: ஆனைமலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், எஸ்.ஐ., ஸ்டீபன் தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது, ஒடையகுளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த, ஒடையகுளத்தை சேர்ந்த சுரேஷ், 40, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 26 மதுபான பாட்டில்கள், 800 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
