/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் முன் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்
/
கோவில் முன் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்
கோவில் முன் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்
கோவில் முன் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 21, 2024 11:29 PM

பூங்காவில் குப்பை
பொள்ளாச்சி, வடுகபாளையம் பூங்காவில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பை மற்றும் காலி மது பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் பூங்காவில் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், பூங்கா அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே, பூங்கா பணியாளர்கள் இதை கவனித்து உடனடியாக தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -மணிவாசகம், வடுகபாளையம்.
பகலில் ஒளிரும் மின்விளக்கு
பொள்ளாச்சி, வெளியூர் செல்லும் பஸ் ஸ்டாண்ட்டில், பொது கழிப்பறை எப்போதும் மூடியுள்ளது. ஆனால் இங்கு மின் விளக்கு மட்டும் இரவு பகலாக ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து மின்சாரம் வீணாவதை தடுக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -நாராயணன், பொள்ளாச்சி.
போக்குவரத்து நெரிசல்
வால்பாறை, சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு, விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் கவனித்து சரி செய்ய வேண்டும்.
- - விமல், வால்பாறை.
ரோட்டில் கழிவுநீர்
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள கால்வாய் சேதம் அடைந்துள்ளது. கால்வாயில் வரும் நீரானது சர்வீஸ் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் இவ்வழியில் செல்லும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன் கடும் துர்நாற்றம் அடைகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
-சரண், கிணத்துக்கடவு.
வீணாகும் குடிநீர்
திப்பம்பட்டி - உடுமலை செல்லும் ரோட்டின் ஓரத்தில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவு குடிநீர் வீணாகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் இதை கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -கார்த்திகேயன், திப்பம்பட்டி.
ரோட்டில் பள்ளம்
உடுமலை, ஆசாத் வீதி உணவகம் முன்பு ரோட்டில் குறுக்காக கழிவுநீர் விடுகின்றனர். நீர் தேங்கி வாகன ஓட்டுநர்கள் விழும் அபாயம் உள்ளது. ரோட்டில் குழிபறித்தால் மூடுவதில்லை. இதனால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே, நகராட்சியினர் இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வராஜ், உடுமலை.
போலீசார் கவனத்துக்கு
உடுமலை - பழநி ரோட்டில், ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகனங்கள் அதன் முன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, சர்தார் வீதி பகுதியில் குப்பைக்கழிவுகளை சாக்கடை கால்வாயில் கொட்டி தீ வைக்கின்றனர். அப்பகுதியில் மிகுதியான புகை பரவுவதுடன், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கால்வாயில் குப்பை தேங்குகின்றன. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
- கணேஷ்குமார், உடுமலை.
நகராட்சி கவனத்துக்கு
உடுமலை, குட்டைத்திடலில் நுாலகத்தின் பின்புறம், குப்பைக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதனால் நுாலகத்தில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. வாசகர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதால், கழிவுகளை அப்பகுதியில் கொட்டாமல் இருக்க நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்துள்ளனர்.
- பார்வதி, உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, காந்திசவுக் பகுதியில் வாகனங்களை ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் இடையூறு ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணன், உடுமலை.
அடையாளம் அழிந்தது
உடுமலை, போடிபட்டியில் வேகத்தடையில் அடையாளம் அழிந்துவிட்டது. புதிதாக அவ்வழியாக சுற்றுலா வரும் வாகன ஓட்டுநர்கள் வேகமாக வந்து தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, அதிகாரிகள் வேகத்தடைக்கு அடையாளமிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரசாந்த், உடுமலை.
அறிவிப்பு பலகையால் குழப்பம்
உடுமலை கொழுமம் ரோடு பிரிவில் உள்ள, இந்த ஊர்களை குறிக்கும் வழிகாட்டி தவறாக உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், மக்கள் குழப்பமடைகின்றனர். எனவே, வழிகாட்டி பலகையை திருத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தீரஜ்குமார், உடுமலை.