/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க மாணவர்களுக்கு கலெக்டர் 'தைரியம்'
/
நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க மாணவர்களுக்கு கலெக்டர் 'தைரியம்'
நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க மாணவர்களுக்கு கலெக்டர் 'தைரியம்'
நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க மாணவர்களுக்கு கலெக்டர் 'தைரியம்'
ADDED : ஜூன் 19, 2025 05:53 AM

கோவை: கோவையில், கல்லூரி கனவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்யும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள, 114 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 17 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கும், நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, மாவட்ட கலெக்டர் நேரடியாக நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அப்பள்ளியில் நேற்று (ஜூன் 18) நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில், 10, 11, 12 ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்த 57 மாணவர்கள் மற்றும் உயர்கல்வி சேர்க்கை பெற்ற 25 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, உயர்கல்வி தொடருவதற்காக, பொருளாதார உதவி தேவை என மாணவ மாணவியர், கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதற்குப் பதிலளித்த கலெக்டர், “மாணவர்கள் எந்தவொரு தடையும் இல்லாமல் உயர் கல்வியை தொடர, மாவட்ட நிர்வாகம் முழுமையான உதவியை வழங்கத் தயாராக உள்ளது,” என உறுதியளித்தார்.