/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பயன்படுத்தாத கட்டடத்துக்கு ரூ.6,000 குப்பை வரி விதிப்பு'
/
'பயன்படுத்தாத கட்டடத்துக்கு ரூ.6,000 குப்பை வரி விதிப்பு'
'பயன்படுத்தாத கட்டடத்துக்கு ரூ.6,000 குப்பை வரி விதிப்பு'
'பயன்படுத்தாத கட்டடத்துக்கு ரூ.6,000 குப்பை வரி விதிப்பு'
ADDED : அக் 28, 2024 05:58 AM
கோவை : கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம், தலைவர் மீனா தலைமையில் நடந்தது. நிர்வாக பொறியாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார்.
அதில், சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் பேசுகையில், ''கோவையில் கனமழை பெய்தபோது, சாலைகளில் மழைநீர் தேங்கி, இடையூறு ஏற்பட்டது. இச்சவாலை, மாநகராட்சி அதிகாரிகள் திறமையாக கையாண்டனர். சில மணி நேரத்தில் மழைநீர் அகற்றப்பட்டது,'' என்றார்.
வரி விதிப்பு குழு தலைவி முபஷீரா: 82வது வார்டில் ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடை அடைப்பை, 'சூப்பர் சக்கர்' வாகனம் பயன்படுத்தி நீக்க வேண்டும்.
அன்னக்கொடி, 49வது வார்டு: தார்ச்சாலை சீரமைப்பு, குடிநீர் வினியோகம், குப்பை அள்ளும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அவற்றை வேகப்படுத்த வேண்டும்.
ஜெயப்பிரதாதேவி, 64வது வார்டு: எங்களது பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது; தங்கு தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.
ராஜேஸ்வரி, 65வது வார்டு: எனது வார்டில் தார்ச்சாலை சீரமைப்பு பணி மந்தமாக உள்ளது. தேவையான இடங்களில் சிமென்ட் ரோடு போட வேண்டும்.
பிரபா ரவீந்திரன், 48வது வார்டு: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணி 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது என்கிறார்கள். ஆனாலும், வார்டு முழுவதும் தார்ச்சாலை சீரமைக்கவில்லை; அப்பணியை வேகப்படுத்த வேண்டும்.
மண்டல தலைவர் மீனா பேசுகையில், ''கட்டட விதிமீறலை கண்டறிந்து, முறையாக சொத்து வரி வசூலிக்க, 'டிரோன் சர்வே' நடக்கிறது; அதில் குறைபாடு இருப்பதாக தகவல் வருகிறது.
'டிரோன் சர்வே' செய்தால், அக்கட்டடங்களுக்கு பில் கலெக்டர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். குப்பை வரி நிர்ணயிப்பதிலும் தவறு நடக்கிறது. கிராஸ்கட் ரோட்டில் பயன்படுத்தாத ஒரு கட்டடத்துக்கு, ரூ.6 ஆயிரம் குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டும்,'' என்றார்.

