/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரசாயனம் சார்ந்த தீ விபத்து ஏற்பட்டால்... கவலை வேண்டாம்! பிரத்யேக தீயணைப்பு வாகனம் வருகிறது
/
ரசாயனம் சார்ந்த தீ விபத்து ஏற்பட்டால்... கவலை வேண்டாம்! பிரத்யேக தீயணைப்பு வாகனம் வருகிறது
ரசாயனம் சார்ந்த தீ விபத்து ஏற்பட்டால்... கவலை வேண்டாம்! பிரத்யேக தீயணைப்பு வாகனம் வருகிறது
ரசாயனம் சார்ந்த தீ விபத்து ஏற்பட்டால்... கவலை வேண்டாம்! பிரத்யேக தீயணைப்பு வாகனம் வருகிறது
ADDED : மார் 17, 2026 06:15 AM

கோவை, தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவைக்கு கெமிக்கல், எண்ணெய் சார்ந்த தீ விபத்துக்களை அணைக்க தேவைப்படும் 'போர்ம் டெண்டர்' (form tender) அதிநவீன தீயணைப்பு வாகனம், 15 நாட்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
கோடைக்காலங்களில் தீ விபத்துக்கள் பொதுவாக அதிகரிக்கும் என்பதால், அவற்றை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளுடன் மாவட்ட தீயணைப்புத்துறையினர் தயாராக உள்ளனர்.
மாவட்ட தீயணைப்புத்துறையின் கீழ், கணபதி, பீளமேடு, தெற்கு, வடக்கு, பொள்ளாச்சி, வால்பாறை உட்பட 14 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. 20 அலுவலர்கள், 224 பணியாளர்கள் உள்ளனர்.
தீ சார்ந்த விபத்துக்கள் பெரும்பாலும் கோடையில்தான் அதிகம் ஏற்படும். தற்போது, வழக்கத்தை காட்டிலும் வெப்பநிலை உயர்ந்துள்ள சூழலில், தீ விபத்துக்களை எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினரும் முன்னேற்பாடுகளை துவக்கியுள்ளனர்.
தற்போது, 54 மீட்டர் உயரத்தில் உள்ள நெருப்பை அணைக்கவும், 400 கிலோ அல்லது 8 பேரை ஒரே நேரத்தில் காப்பாற்றும் நவீன வசதிகள் கொண்ட ஸ்கை லிப்ட் வாகனம் ஒன்றும், வாட்டர் டெண்டர் பிரிவில் 19 வாகனமும், க்யூ.ஆர்.வி. வாகனம் 5, அவசர நவீன வாட்டர் டெண்டர் 1 உட்பட 30 வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன.
தவிர, கோவை தெற்கு, கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், தீயணைப்பு நிலையங்களுக்கு மல்டி பிளஸ் ஹை டெக் வாட்டர் டெண்டர் வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன்.
''2025ல் 1,577 தீ விபத்து அழைப்புகள் வந்தன. 6,993 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளோம். தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரிகளில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளித்துள்ளோம்.
அவசரகாலத்தில் செயல்பட தொழில் நிறுவன செக்யூரிட்டிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் உள்ள ஏ.சி.,பிரிஜ்ஜை சர்வீஸ் செய்து பயன்படுத்த வேண்டும்,'' என்று 'அலர்ட்' செய்கிறார் அவர்.
தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவைக்கு கெமிக்கல், எண்ணெய் சார்ந்த தீ விபத்துக்களை அணைக்க தேவைப்படும் 'போர்ம் டெண்டர்' (form tender) அதிநவீன வாகனம், 15 நாட்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது கூடுதல் தகவல்!

