/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நில அளவை பணியில்.. போதாது வேகம் . கருவிகள் இருந்தும் பயனில்லை
/
நில அளவை பணியில்.. போதாது வேகம் . கருவிகள் இருந்தும் பயனில்லை
நில அளவை பணியில்.. போதாது வேகம் . கருவிகள் இருந்தும் பயனில்லை
நில அளவை பணியில்.. போதாது வேகம் . கருவிகள் இருந்தும் பயனில்லை
ADDED : மார் 15, 2026 05:22 AM

கோவை, நில அளவை துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் நவீன டிஜிட்டல் கருவிகள் சார்ந்த அளவை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலங்களை அளக்கவும், உட்பிரிவு செய்யவும், பட்டா மாறுதல் மேற்கொள்ளவும் தற்போது நவீன டிஜிபிஎஸ் கருவிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. துல்லிய அளவீடு, எல்லை நிர்ணயம் மற்றும் ஆக்கிரமிப்புகளை கண்டறிய இது சிறந்த தேர்வாக உள்ளது.
குறிப்பாக, 10 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால், இந்த டிஜிட்டல் சர்வேயே சிறந்தது என அதிகாரிகளே பரிந்துரைக்கின்றனர். ஆனால், இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் பெரியசாமி கூறுகையில், ''அவசர தேவைக்கு கூட நிலத்தை அளக்க முடிவதில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே (மாவட்டத்திற்கு 2) டிஜிபிஎஸ் கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, நில அளவை பணிகளை சர்வேயர்கள் பல மாதங்களாக இழுத்தடிக்கின்றனர்,'' என்றார்.
சர்வேயர் ஒருவரிடம் கேட்டதற்கு, 'தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், நில அளவை உதவி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பி, கருவியின் இருப்பை பொறுத்து வாங்கி வருவோம். ஒரு பிர்கா சர்வேயரே இலவச வீட்டுமனை பட்டா, மக்களுடன் முதல்வர், உங்களுடன் ஸ்டாலின், குறைதீர் கூட்ட மனுக்கள் என பல பணிகளை கையாள்கிறோம்' என்றார்.
19 கருவிகள் கையிருப்பு தாலுகாவுக்கு இரண்டு கருவிகளை விவசாயிகள் கேட்டு வருகின்றனர். ஆனால் கிடைப்பதில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) மூலம் பெற்ற தகவலில், மாவட்ட நில அளவைப் பிரிவில் 19 டிஜிபிஎஸ் கருவிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 11 தாலுகாக்கள் உள்ளன. தேவை அதிகம் உள்ள தாலுகாக்களுக்கு கருவிகளை பகிர்ந்து வழங்கலாம். இதன் மூலம் நில அளவை பணிகளில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முடியும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அனைத்து கருவிகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; நில அளவை பணிகளை துரிதபடுத்த வேண்டும்.

