/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாதேஸ்வரர் கோவிலில் காலபைரவர் ஜெயந்தி துவக்கம்
/
மாதேஸ்வரர் கோவிலில் காலபைரவர் ஜெயந்தி துவக்கம்
ADDED : நவ 21, 2024 11:17 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் மிகவும் பழமையான மாதேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை தீபம், கார்த்திகை சோம வர பூஜைகள், கால பைரவர் ஜெயந்தி விழா, கால பைரவர் சஷ்டி விழா ஆகிய விழாக்கள் நடத்த, நிர்வாக குழு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த, 18ம் தேதி முதல் கார்த்திகை மாத சோமவார பூஜை நடைபெற்றது. நாளை (23ம்) தேதி கால பைரவர் ஜெயந்தி விழா தொடங்குகிறது.
மாலை, 3:00 மணிக்கு மங்கள இசை விநாயகர் வழிபாடும், நான்கு மணிக்கு கால பைரவருக்கு சிறப்பு வேள்வி பூஜை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, காலபைரவருக்கு, 54 வகை மூலிகையால் அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.
மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த வேள்வியை சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தைச் சார்ந்த சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் செய்கின்றனர்.