/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடியில்உருவப்படம் திறப்பு விழா
/
அங்கன்வாடியில்உருவப்படம் திறப்பு விழா
ADDED : மார் 03, 2024 10:13 PM
பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே உருமாண்டம்பாளையத்தில் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் உருவப்படம் திறப்பு விழா நடந்தது.
இங்குள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையத்துக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என, அங்கன்வாடி ஆசிரியர்கள் மாநகராட்சி, 14 வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேலுவிடம் கோரிக்கை விடுத்தனர்.
கவுன்சிலர் வாயிலாகஉருமாண்டம்பாளையத்தை சேர்ந்த நல்லசாமி குடும்பத்தினர் நிதி வழங்கினார். இதையடுத்து அங்கன்வாடி குழந்தைகள் மையத்துக்கு மேற்கூரை அமைக்கும் பணி நிறைவடைந்தது. நல்லசாமி நினைவாக அவரது உருவப்படம் திறப்பு விழா நடந்தது.
கோவை எம்.பி., நடராஜன் பங்கேற்று, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவுக்கு கவுன்சிலர்கள் சித்ரா தங்கவேலு, சுமதி நாகராஜ், சாந்தாமணி பச்சை முத்து, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

