தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டை கடக்க முடியவில்லை

ரோட்டை கடக்க முடியவில்லை

ரோட்டை கடக்க முடியவில்லை


UPDATED : ஆக 04, 2026 06:08 PM

ADDED : ஆக 04, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 06:08 PM ADDED : ஆக 04, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1. ரோட்டை கடக்க முடியவில்லை

சின்னியம்பாளையம் அவிநாசி ரோட்டில் சிக்னல் இயங்கவில்லை. பேரிகார்டர் வைத்து மறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்குழந்தைகள், முதியவர்கள் ரோட்டை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

-மருதாசலம், சின்னியம்பாளையம்

2. குப்பையால் சுகாதார சீர்கேடு

சுண்டபாளையம் மாநகராட்சி பள்ளி அருகில் குவிந்து கிடைக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.

-புவனேஸ்வரி, சுண்டபாளையம்

3. ரோடு சேதம்

கணபதி பழனியாண்டவர் கோவில் அருகில் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தாலும், கற்கள் சிதறி கிடப்பதாலும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

-கணேஷ், கணபதி

4. கழிவுகளால் கஷ்டம்

காந்திபுரம் செம்மொழி பூங்கா அமைந்துள்ள பகுதி அருகே கட்டடக் கழிவுகள், கற்கள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இக்கழிவுகளில் இருந்து பறக்கும் துாசுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

-சஞ்சய், ரேஸ்கோர்ஸ்.

5. ஆபத்தான நிலையில் லைட்டுகள்

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகை டியூப் லைட்டுகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளன.

-ரமேஷ், சாய்பாபா காலனி

6. மின் விளக்கில் கொடி

நல்லாம்பாளையத்திலிருந்து மணிகாரம்பாளையம் செல்லும் ரோட்டில் மின்விளக்கில் பல நாட்களாக படர்ந்துள்ள கொடியை அப்புறப்படுத்த யாரும் முன்வரவில்லை. விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

-நாகராஜன், நல்லாம்பாளையம்

7. இருக்கை சேதம்

தொண்டாமுத்தூர் ரோடு, பூசாரிபாளையம் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அமர்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இருக்கை உடைந்துள்ளது. அதை மாற்ற வேண்டும்.

-சங்கர், பூசாரிபாளையம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us