தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்


ADDED : ஆக 27, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1. போக்குவரத்து பாதிப்பு கொடிசியா ரோட்டில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகள் மிகவும் மெதுவாக நடக்கின்றன. டைடல் பார்க் ரயில்வே மேம்பாலப் பணிகளால் மாற்றுப்பாதையும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

– ஜகதீசன்:

2. சுகாதார சீர்கேடு சிங்காநல்லுார் உப்பிலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பொது கழிப்பறையைச் சுற்றி அதிகளவில் குப்பைகள் குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சமூக விரோதிகளால், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

– பானுமதி:

3. பராமரிக்காத சாக்கடை துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள சாக்கடை பல நாட்களாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. சாக்கடை நீர் சாலை வரை தேங்கி நிற்கிறது. சாக்கடையை சுத்தம் செய்து, முறையாக பராமரிக்க வேண்டும்.

– ராஜசேகர்:

4. நீர்வழி ஆக்கிரமிப்பு நரசிம்மநாயக்கன்பாளையம், மழைநீர் புதுப்பாளையம் தடுப்பணைக்கு வரும் 15 அடி அகல நீர்வழிப்பாதையில், சித்தி விநாயகர் கோவில் பின்புறம் மரம் ஒன்று முறிந்து விழுந்து பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளது. நீர்வழிப்பாதையை தூர்வாரி, முறிந்து விழுந்த மரத்தை அகற்ற வேண்டும்.

– மாணிக்கம்:

5. குடிநீரில் கழிவுநீர் அவிநாசி சாலை ஐ.ஒ.சி., பெட்ரோல் பங்க், தனியார் வங்கி அருகில் கடந்த 5 நாட்களாக குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறி வருகிறது. குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.

– நிவாஸ்தீன்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us