ADDED : செப் 01, 2026 06:41 PM
1. மூடப்படாத குப்பை மாநகராட்சி குப்பை வண்டி, மூடப்படாமல் செல்வதால், குப்பை சாலையில் சிதறுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.
– பாபு: 2. சாலையை அடைக்கும் குப்பை நியூ சித்தாபுத்துார் வெங்கிடசாமி ரோட்டில், ரேஷன் கடை முன்பு சாலையை அடைத்து குப்பை கொட்டப்பட்டுள்ளது. மற்ற வண்டியில், மாற்றும் பணியாலும் அப்பகுதி அசுத்தமாகிறது. சாலையில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க பேண்டும்.
– சண்முகம்: 3. முடிக்கப்படாத சாலைப் பணி ஒண்டிப்புதுார் சூர்யா நகர் 2 வது வீதி பிரிவில் சாலைப் பணி முடிக்கப்படாமல், பள்ளம் மேடாக உள்ளது. மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. சாலையை முறையாக சீரமைக்க வேண்டும்.
– நாராயணன் அண்ணாமலை: 4. சுகாதார சீர்கேடு நரசிம்மநாயக்கன்பாளையம், ரங்கா காலனி 3 வது கிழக்குத் வீதியில், பாதாள சாக்கடை மூடி வழியாக 4 ஆண்டுகளாக சாதாரண நாட்களிலும், மழைக்காலங்களிலும் சாக்கடை நீர் துர்நாற்றத்துடன் வெளியேறுகிறது. சாக்கடை நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.
– கார்த்திக்ராஜா: 5. வேகத்தடைகளால் விபத்து அபாயம் பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.எஸ்., நகர் பிரதான ரோட்டில் உள்ள, 8 வேகத்தடைகள் முறையாக அமைக்கப்படாததால், பைக்குகள், கார்கள் விபத்துக்குள்ளாகின்றன. வேகத்தடைகளை ஆய்வு செய்து முறையாக சீரமைக்க வேண்டும்.
– அருண்குமார்: 6. வழிகாட்டி பலகையை மறைக்கும் மின்பெட்டி அவிநாசி ரோடு, எல்.ஐ.சி., சிக்னல் சந்திப்பு அருகே வழிகாட்டி பலகையை மறைக்கும் வகையில் மின்சார பெட்டி அமைந்துள்ளது. வழிகாட்டு பலகை தெளிவாகத் தெரியுமாறு மின்சார பெட்டியை மாற்றி அமைக்க வேண்டும்.
– தனுஷ்: 7. தொங்கும் கேபிள்கள் அவிநாசி மேம்பாலத்தின் கீழே கேபிள்கள் சாலையின் குறுக்கே ஊஞ்சல் போல் தொங்கிய நிலையில் உள்ளன. இரண்டு நாட்களுக்கும் மேலாக இந்நிலை நீடிப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. விபத்து ஏற்படும் முன் அகற்ற வேண்டும்.
– சங்கர்: 8. வாகன ஓட்டிகள் அவதி கோவை டவுன்ஹால் சிக்னல் அருகே ரோட்டில், பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இப்பள்ளத்தில் செங்கல், கற்களும், மண்ணும் போடப்பட்டுள்ள உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
–கிருஷ்ணன்:
