/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்க தொகை
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்க தொகை
ADDED : அக் 14, 2025 09:25 PM

பெ.நா.பாளையம்; தடாகம் ரோடு, கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் வெங்கிட்டாபுரம் கமலநாதன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செயல் என்ற சமூக செயல்பாட்டு களம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் வெங்கிட்டாபுரம் கமலநாதன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு, 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய, 21 மாணவர்களுக்கும், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் விழாவில் சிறப்பிக்கப் பட்டனர்.
நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு நடந்த பறை இசைப்போட்டியில், மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற பறை இசைக் கலைஞர் அன்பு பாராட்டு பெற்றார்.