/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க பயணியருக்கு பரிசு வழங்கி ஊக்குவிப்பு
/
ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க பயணியருக்கு பரிசு வழங்கி ஊக்குவிப்பு
ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க பயணியருக்கு பரிசு வழங்கி ஊக்குவிப்பு
ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க பயணியருக்கு பரிசு வழங்கி ஊக்குவிப்பு
ADDED : செப் 22, 2024 11:45 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க, ரயில்வே சங்கம் சார்பில் பயணியருக்கு பரிசு வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, கோவை, மதுரை, பொள்ளாச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் ரயில்கள் நின்று செல்கிறது. இந்த ஊர்களுக்கு செல்ல பயணியர் பலர் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் வந்து டிக்கெட் எடுத்து செல்லும் நிலை இருந்தது.
தற்போது, பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் கூடுதல் பயணியரை ஈர்க்கும் வகையில், கிணத்துக்கடவு ரயில் பயணியர் சங்கம் புது யுக்தியை கையாண்டுள்ளது.
இதில், ரயில்வேயின் யு.டி.எஸ்., செயலி பதிவிறக்கம் செய்து, அதில் சீசன் டிக்கெட் மற்றும் சாதாரண டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும், ஐ.ஆர்.சி.டி.சி., அல்லது ரிசர்வேஷன் கவுன்டரில், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு அறிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, பயணியர் யு.டி.எஸ்., மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., செயலி வாயிலாக டிக்கெட் பெற துவங்கியுள்ளனர். டிக்கெட் முன்பதிவு செய்தவர்களில், ஒவ்வொரு வகைக்கும், மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு யு.டி.எஸ்., செயலில், 100 ரூபாய் ரீசார்ஜ் செய்யப்பட்டது. இதனால், ரயில்வே கொடுக்கும் ஊக்கத்தொகை உட்பட 103 இலவசமாக பெற்றனர்.
கிணத்துக்கடவில் ரயில் டிக்கெட் முன்பதிவை அதிகரிக்க ரயில் பயணியர் சங்கம் சார்பில் மேற்கொண்ட இந்த முயற்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.