/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவியர் வசதிக்காக 'இன்சினேட்டர்' நகராட்சி, தன்னார்வ அமைப்பு உதவி
/
மாணவியர் வசதிக்காக 'இன்சினேட்டர்' நகராட்சி, தன்னார்வ அமைப்பு உதவி
மாணவியர் வசதிக்காக 'இன்சினேட்டர்' நகராட்சி, தன்னார்வ அமைப்பு உதவி
மாணவியர் வசதிக்காக 'இன்சினேட்டர்' நகராட்சி, தன்னார்வ அமைப்பு உதவி
ADDED : மார் 17, 2025 12:10 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், மாணவியர் விடுதி உள்ளிட்ட இடங்களில், தன்னார்வலர்கள் உதவியுடன், ஐந்து இன்சினேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி நகராட்சியில், அரசுப்பள்ளிகள், அரசு கலைக்கல்லுாரி செயல்படுகின்றன. தினமும் ஒரு பள்ளி என்கிற அடிப்படையில், நகராட்சி கமிஷனர் கணேசன் விசிட் செய்து, மாணவர்களிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பள்ளி வளாகத்துாய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்கிறார்.
மாணவ, மாணவர்களிடம் பள்ளியில் தேவையான வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. அதில், பள்ளி, கல்லுாரி மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவியர் வசதிக்காக, 'இன்சினேட்டர்' பொருத்த கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகளில், ஐந்து இன்சினேட்டர் வாங்கி பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் கணேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது:
பள்ளி மாணவர்களிடம், நாளிதழ்கள் படிப்பதால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கப்படுகிறது. மேலும், படிப்புடன் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வது அவசியம். திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விளக்கும் வகையில், பள்ளிகளுக்கு விசிட் செய்யப்படுகிறது.
அப்போது, கல்லுாரி, பள்ளி, விடுதியில், சானிட்டரி நாப்கின்களை எரிக்க கூடிய, 'இன்சினேட்டர்' தேவை குறித்து கேட்டறியப்பட்டது. ரோட்டரி கிளப், இன்னர்வீல் கிளப் உதவியுடன் தற்போது பொருத்தப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் நல விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லுாரி ஆகிய ஐந்து இடங்களில், இன்சினேட்டர் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு, கூறினார்.