ADDED : ஜூலை 25, 2025 09:22 PM

கோவை; கோவை வருமான வரி ஆணையரகம் சார்பில், 166வது வருமான வரி தினம், குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கோவை, தலைமை வருமான வரி கமிஷனர் அருண் பாரத் தலைமை வகித்தார்.
கே.ஜி., மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம், பண்ணாரியம்மன் குழு தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மத்திய நேர்முக வரி வாரிய தலைவர் ரவி அகர்வாலின் உரை, ஒளிபரப்பப்பட்டது.
அவர் தனது உரையில் புதிய வருமான வரிச் சட்டம் 2025 இயற்றுவதில், துறையின் பங்களிப்பு, எளிய முறையில் புதிய சட்டத்துக்கு தகவமைத்தல், வருமான வரி மோசடிகளைக் கட்டுப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து விளக்கினார். அப்துல்கலாம் கனவு சிறப்புப் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி உட்பட, பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
முதன்மை வருமான வரி கமிஷனர் திவாகர் பிரசாத், கூடுதல் கமிஷனர் இளமுருகு உள்ளிட்ட வருமானவரி அதிகாரிகள், வருமான வரி செலுத்துனர்கள் பங்கேற்றனர்.