UPDATED : அக் 13, 2026 07:31 PM
ADDED : அக் 13, 2026 07:16 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதுடன், விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.
பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. இங்கு இருந்து பெரும்பாலும் கேரளாவுக்கு மாடுகள், வளர்ப்பு மற்றும் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
நேற்று, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள்; தஞ்சாவூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம், ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட வெளிநகரங்களிலிருந்து, பல்வேறு ரக மாடுகள் கொண்டு வரப்பட்டன. சந்தையில், 3,000 மாடுகள் வரத்து இருந்ததுடன், விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.
நாட்டு பசு மாடுகள்,55 – 60 ஆயிரம் ரூபாய், எருமை,55 --– 60 ஆயிரம் ரூபாய், காங்கேயம் காளை, 95ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை, முரா, 90 – 95 ஆயிரம் ரூபாய், எச்.எப். 1 லட்சம் – ஒரு லட்சத்து, 5ஆயிரம் ரூபாய்; ஜெர்சி 35 – -40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. புரட்டாசி மாதத்தையொட்டி விற்பனை மந்தமாக இருந்த நிலையில், நேற்று விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.
