/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவில் கிரிமினல் வழக்குகள் அதிகரிப்பு: மாநில குற்றப்பதிவு பிரிவு அறிக்கை
/
கேரளாவில் கிரிமினல் வழக்குகள் அதிகரிப்பு: மாநில குற்றப்பதிவு பிரிவு அறிக்கை
கேரளாவில் கிரிமினல் வழக்குகள் அதிகரிப்பு: மாநில குற்றப்பதிவு பிரிவு அறிக்கை
கேரளாவில் கிரிமினல் வழக்குகள் அதிகரிப்பு: மாநில குற்றப்பதிவு பிரிவு அறிக்கை
ADDED : ஜன 04, 2024 10:42 PM
பாலக்காடு:கேரளாவில், கிரிமினல் வழக்குகள் அதிகரித்து வருவதாக, மாநில குற்றப்பதிவு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2022ல், மாநிலத்தில் பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்குகளை ஒப்பிடுகையில், கடந்த, நவம்பர் மாதம் வரையிலான புள்ளி விபரங்கள் அடிப்படையில், 5,101 வழக்குகள் கூடுதலாக இந்தாண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை முயற்சி வழக்குகள் அதிகரித்துள்ளன. சிறு வாக்குவாதம் ஏற்பட்டாலும், அடுத்த நிமிடம் அடிதடியில் முடிகிறது. இதனால், கொலை முயற்சி வழக்கு அதிகரித்துள்ளது. கோழிக் குழம்பின் அளவு குறைந்ததால் கூட, கடை உரிமையாளரை ஆயுதம் கொண்டு தாக்கும் சம்பவம் மாநிலத்தில் நடக்கிறது.
குடி போதை மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்துவது குற்றங்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.
கடந்த, 2022ல் மொத்தம் 2,35,858 வழக்குகள் பதிவானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான மொத்த வழக்குகள் 2,40,959 ஆகும். டிசம்பர் மாதத்தையும் கணக்கிடும் போது, வழக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். 2022ல், 700 கொலை முயற்சி வழக்குகள் பதிவானது. கடந்த ஆண்டு நவம்பர் வரை, 918 கொலை முயற்சி வழக்குகள் பதிவானது. மோசடி வழக்குகளும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு நவ., மாதம் வரை 10,393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2022ல், 8,307 வழக்குகள் மட்டுமே பதிவானது.
பாலியல் பலாத்கார வழக்குகளும், பெண்களை அவமதித்து அத்துமீறும் வழக்குகளும் அதிகரித்துள்ளன. 2022ல், வரதட்சணை கொடுமை மூலம், 11 பேர் பலியாயினர். கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் வரை, எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கணவர் மற்றும் குடும்பத்தினரின் துன்புறுத்தல் வழக்குகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை 4,345 ஆகும். இது, 2022ல் 4,998 ஆக பதிவாயிருந்தது.
கொலை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்தாண்டு, நவம்பர் வரை 306 கொலை வழக்குகள் பதிவானது. இது, 2022ல் 334 ஆக பதிவாயிருந்தது. இதுதவிர, திருட்டு வழக்குகளும் மாநிலத்தில் அதிகரித்துள்ளன.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.