/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இ- காமர்ஸ் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகரிப்பு
/
கோவையில் இ- காமர்ஸ் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகரிப்பு
கோவையில் இ- காமர்ஸ் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகரிப்பு
கோவையில் இ- காமர்ஸ் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகரிப்பு
ADDED : செப் 30, 2025 10:54 PM
இ ரண்டாம் நிலை நகரங்களில் ஆன்லைன் ஷாப்பிங்கில், வட மாநிலங்களில் சண்டிகர், தென்னிந்தியாவில் கோவை, கிழக்கில் வடோதரா, மேற்கில் ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்கள் முதலிடத்தில் உள்ளன. எனவே, கோவையில் உள்ளூர் சந்தையுடன் ஏற்றுமதி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் டெக்ஸ்டைல் உபகரணங்கள், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், அழகு சாதனம், இயந்திர உதிரி பாகங்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்டவை இ- காமர்ஸ் துறை ஏற்றுமதியில் நல்ல வாய்ப்புகளைத் தருகின்றன.
அமேசான் போன்ற தளங்கள், குளோபல் செல்லிங் திட்டங்களின் வாயிலாக, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற நகரங்களின் எம்.எஸ்.எம்.இ., துறையினரை இ- காமர்ஸ் ஏற்றுமதிக்கு ஊக்குவிக்கின்றன.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய நாடுகளில் தமிழக எம்.எஸ்.எம்.இ., பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
தமிழகத்தில் 47 லட்சம் உத்யம் பதிவு பெற்ற எம்.எஸ்.எம்.இ.,கள் உள்ளன. இதில், கரூர், கோவை, திருப்பூர் பகுதிகளில், கடந்த 5 ஆண்டுகளில் இ- காமர்ஸ் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.