/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு; முகாம் நடத்த எதிர்பார்ப்பு
/
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு; முகாம் நடத்த எதிர்பார்ப்பு
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு; முகாம் நடத்த எதிர்பார்ப்பு
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு; முகாம் நடத்த எதிர்பார்ப்பு
ADDED : மே 14, 2025 11:38 PM
வால்பாறை; வால்பாறையில், வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால், சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், கோடை மழைக்கு பின் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு, வைரஸ் காய்ச்ல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, வால்பாறை நகர் பகுதியில் காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். குறிப்பாக, தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நாளில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்,' என்றனர்.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கூறுகையில், 'சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பரவும் வைரஸ் காய்ச்சலை தவிர்க்க, பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்பு இருந்தால், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வேண்டும். டாக்டரின் பரிந்துரையில்லாமல் கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.