/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு; விலை உயருமென எதிர்பார்ப்பு
/
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு; விலை உயருமென எதிர்பார்ப்பு
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு; விலை உயருமென எதிர்பார்ப்பு
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு; விலை உயருமென எதிர்பார்ப்பு
ADDED : அக் 09, 2024 10:15 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் வாழைத்தார் உடனுக்குடன் விற்பனையாவதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இந்த வாரத்தில் வாழைத்தார் வரத்து அதிகரித்தும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு மார்க்கெட்டில், செவ்வாழை கிலோ - 70 ரூபாய், நேந்திரன் - 25, கதளி - 35, பூவன் - 35, ரஸ்தாளி - 40, சாம்பிராணி வகை - 42 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, செவ்வாழை - 5, கதளி - 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. சாம்பிராணி வகை மட்டும் 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது, 'சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.