/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறி வரத்து அதிகரிப்பு; விலையிலும் மாற்றம்
/
காய்கறி வரத்து அதிகரிப்பு; விலையிலும் மாற்றம்
ADDED : செப் 24, 2024 11:45 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் காய்கள் விலை மாற்றம் அடைந்தும் வரத்து அதிகரித்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ பெட்டி) 450 - 600; தேங்காய் -- 23 (ஒன்று), கத்தரிக்காய் (கிலோ) -- 38, முருங்கைக்காய் - 25, வெண்டைக்காய் - 20, முள்ளங்கி - 25, வெள்ளரிக்காய் - 20, பூசணிக்காய் - 7, அரசாணிக்காய் - 7, பாகற்காய் - 28, புடலை - 20, சுரைக்காய் - 20, பீக்கங்காய் - 23, பீட்ரூட் - 15, அவரைக்காய் - 30, பச்சை மிளகாய் - 27 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த வாரத்தை விட, தக்காளி (15 கிலோ பெட்டி) 270 ரூபாய், தேங்காய் 5 - 8; பாகற்காய் - 3, பச்சைமிளகாய் - 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் -- 5, முள்ளங்கி --- 8, பூசணிக்காய் --- 8, அரசாணிக்காய் --- 8, சுரைக்காய் --- 2, பீட்ரூட் - 5, அவரைக்காய் - 5 ரூபாய் விலை சரிந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'இந்த வாரம் மார்க்கெட்டில் வழக்கத்தை விட காய்கறி வகைகள் வரத்து அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, தக்காளி ஆயிரம் முதல் 1,500 பெட்டிகள் கூடுதலாக வரத்து இருந்தது. மேலும், இதன் விலையும் அதிகரித்தது. பிற காய்கள் விலையில் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது' என்றனர்.