/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீதோஷ்ணநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: குடிநீரை காய்ச்சி குடியுங்க
/
சீதோஷ்ணநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: குடிநீரை காய்ச்சி குடியுங்க
சீதோஷ்ணநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: குடிநீரை காய்ச்சி குடியுங்க
சீதோஷ்ணநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: குடிநீரை காய்ச்சி குடியுங்க
ADDED : செப் 30, 2025 10:18 PM
வால்பாறை:
காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்தது. அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டமும் நிலவுகிறது.
சீதாஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் ஏற்பட்டுள்ளது. வால்பாறையில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: வால்பாறையில் பருவமழைக்கு பின், தற்போது சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவும், கடுங்குளிரும் நிலவுவதால் மக்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல வேண்டும். குளிர் நிலவுவதால் பாதுகாப்பான வெப்ப உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். மருந்துக் கடைகளில் தன்னிச்சையாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது. சிதோஷ்ணநிலை மாற்றத்தால், வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். வால்பாறை நகரில் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும். இவ்வாறு, கூறினர்.