தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காய்கறி வரத்து உயர்வு: தக்காளி விலை சரிவு

காய்கறி வரத்து உயர்வு: தக்காளி விலை சரிவு

காய்கறி வரத்து உயர்வு: தக்காளி விலை சரிவு


UPDATED : ஆக 04, 2026 04:49 PM

ADDED : ஆக 04, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 04:49 PM ADDED : ஆக 04, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து உயர்ந்துள்ள நிலையில், தக்காளி (15 கிலோ பெட்டி) விலை 60 ரூபாய் விலை சரிந்துள்ளது.

கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) - - 280, தேங்காய் (ஒன்று) --- 35, கத்திரிக்காய் கிலோ - 44, முருங்கைக்காய் --- 40, வெண்டைக்காய் --- 55, முள்ளங்கி --- 28, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 12, பாகற்காய் --- 50, புடலை --- 25, சுரைக்காய் --- 25, பீர்க்கங்காய் --- 40, வெள்ளரிக்காய் --- 15, அவரைக்காய் --- 50, பீட்ரூட் --- 35, மற்றும் பச்சை மிளகாய் --- 50 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று கத்திரிக்காய் கிலோவுக்கு, 11 ரூபாய் விலை குறைந்துள்ளது. தக்காளி (15 கிலோ) --- 60, தேங்காய் (ஒன்று) --- 10, முள்ளங்கி --- 3, அவரைக்காய் --- 30, முருங்கைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், பீட்ரூட் மற்றும் பச்சை மிளகாய் கிலோவுக்கு - 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'உள்ளூர் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. வெளியூர் வரத்து இல்லை. தக்காளி நடவு துவங்கியுள்ளதால், வரும் நாட்களில் தக்காளி கூடுதல் வரத்து எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us