அவினாசிலிங்கம் பல்கலையில் சுதந்திர தினவிழா கோலாகலம்
அவினாசிலிங்கம் பல்கலையில் சுதந்திர தினவிழா கோலாகலம்
ADDED : ஆக 16, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
கோவை: அவினாசிலிங்கம் பல்கலையில் சுதந்திர தின விழா நடந்தது. பல்கலை வேந்தர் மீனாட்சி சுந்தரம் தேசியக் கொடியேற்றி, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தேசிய மாணவர் படை மற்றும் இந்திய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், இளைஞர்களின் பொறுப்பு, அறிவு, அறம் மற்றும் சமூக சேவை மூலம் நாட்டை முன்னேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினர் நரசிம்மன், 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மாணவச் சங்க தலைவர் மகா ஸ்ரீமா வரவேற்றார். துணைத் தலைவர் ஜெயவர்ஷினி நன்றி கூறினார்.
