/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான வாலிபால் போட்டி இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ் அணி வெற்றி
/
மாநில அளவிலான வாலிபால் போட்டி இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ் அணி வெற்றி
மாநில அளவிலான வாலிபால் போட்டி இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ் அணி வெற்றி
மாநில அளவிலான வாலிபால் போட்டி இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ் அணி வெற்றி
ADDED : மே 30, 2025 12:11 AM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா உள்விளையாட்டு அரங்கில் அக்வா பம்ப் குரூப் நிறுவனங்களின் சார்பில், டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நேற்று முன்தினம் இரவு துவங்கியது. முதல் நாள், முதல் போட்டியில், இந்தியன் வங்கி அணி, 25:18, 23:25, 25:16, 25:18 என்ற புள்ளி கணக்கில், 3-1 என்ற செட் கணக்கில், தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் கஸ்டம்ஸ் அணி, 20:25, 25:15, 22:25, 25:17, 15:12 என்ற புள்ளி கணக்கில், 3-2 என்ற செட் கணக்கில், அக்வா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வென்றது.
இன்று மாலை, 5:30 மணிக்கு நடக்கும் மாநில அளவிலான முதல் போட்டியில் இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ் அணியும், இரண்டாவது போட்டியில், தமிழ்நாடு போலீஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் மோதுகின்றன. மாநில அளவிலான போட்டிகள் 'லீக்' முறையில் நடக்கிறது.