/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறைச்சி வாங்க பாத்திரத்துடன் வந்தால் கிலோவுக்கு ரூ.10 தள்ளுபடி அறிவிப்பு ஆலோசனை கூட்டத்தில் தகவல்

ADDED : நவ 25, 2024 10:34 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில், இறைச்சி கடை வியாபாரிகள், சலுான் கடைக்காரர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமை வகித்து பேசியதாவது:
நகராட்சியில் அனைத்து கடைக்காரர்களும், தொழில் உரிமம் பெற வேண்டும். கழிவுகளை பொதுவெளியில் போடுவதால் தெருநாய்கள் தொந்தரவு உள்ளது. இறைச்சிக்கழிவை சாப்பிட கூட்டமாக வரும் நாய்களால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, நகராட்சி அறிவுரையின்படி, இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை உபயோகப்படுத்தக்கூடாது. இறைச்சியை பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்ய வேண்டும். கடைகளை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்.
சலுான் கடைக்காரர்கள், கடைகளை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். முடிக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது. கழிவுகளை வாரம் ஒரு முறை நகராட்சி பணியாளர்கள் வாயிலாக கொடுக்க வேண்டும்.
தெருக்களில் கழிவுகளை போடாமல் சுகாதாரத்தை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால் துாய்மையான நகரமாக மாற்ற முடியும்.
இவ்வாறு, பேசினார்.
தொடர்ந்து பேசிய இறைச்சி கடைக்காரர்கள், 'வாடிக்கையாளர்கள் இறைச்சி வாங்க வரும் போது, பாத்திரம் கொண்டு வந்தால், கிலோவுக்கு, 10 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும்,' என, தெரிவித்தனர்.