தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உதிரிபாகங்களை கூட ஏற்றுமதி செய்யலாம் ஏற்றுமதி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

 உதிரிபாகங்களை கூட ஏற்றுமதி செய்யலாம் ஏற்றுமதி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

 உதிரிபாகங்களை கூட ஏற்றுமதி செய்யலாம் ஏற்றுமதி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்


ADDED : ஜூலை 09, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை, ஏற்றுமதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடந்தது.

இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா மற்றும் பல்வேறு தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

குறு சிறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை ஏற்றுமதி செய்வது எப்படி, இதற்கான உரிமங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெறுவது எப்படி உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை தொழில் முனைவோர் கேட்டனர். அதிகாரிகள் விளக்கினர்.

'நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்கின்றன. குறு, சிறு நிறுவனங்கள் ஏற்றுமதியாளர்களாக மாறினால் கோவையின் வளர்ச்சி பெருகும். குறு நிறுவனங்கள் ஜாப் ஆர்டர் அடிப்படையில் இயங்குவதால் ஏற்றுமதி குறித்து சிந்திப்பதில்லை.

குறுந்தொழில் முனைவோர், உதிரிபாகங்களை கூட ஏற்றுமதி செய்யலாம். இதுகுறித்து ஒவ்வொரு தொழில் அமைப்புக்கும் தனித்தனியாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அனைத்து வழிகாட்டுதல்களையும் மாவட்ட தொழில் மையம் வழங்கும்' என்று அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us